Sunday, September 5, 2010

அன்பான ஆசிரியர்களுக்கு என் மனமார்ந்த நன்றி....

வலைப்பதிவு எழுதவேன்டும் என்னும் ஆர்வம் வெகு நாட்களாக இருந்தது.
இன்று ஆசிரியர்கள் தினம். என் முதல் வலைப்பதிவை என் வாழ்வில் முக்கிய பங்கு வகித்த ஆசிரியர்களுக்கு என் மனமார்ந்த நன்றி செலுத்தி சமர்பிக்கிறேன்.

आचार्य देवो भव
ஆசார்யரை (குருவை) கடவுளைப்போல் நினைக்கவேண்டும் என்று தைத்ரிய உபநிஷத் (तैत्तिरीयोपनिषद - Taittiriya Upanishad)சொல்கிறது.

गुरु गोविन्द दोऊ खड़े काको लागूं पायं। बलिहारी गुरु आपने जिन गोविन्द दियो बताय।।
கபீர்தசின் இருவரி கவிதைகளில் ஒன்று - குருவும் கோவிந்தனும் (கடவுளும்) என் முன் வந்து நின்றால் யாரை முதலில் வணங்குவது என்னும் கேழ்விக்கு கபீர்தாஸ் கூறும் பதில் - குரு தான் நமக்கு கோவிந்தனை (கடவுளை) காட்டுகிறார் அதனால் குருவைத்தான் முதலில் வணங்கவேண்டும்.

ஹிந்து மதத்தின் எந்த சம்பிரதாயங்களை எடுத்து பார்த்தாலும் அது சொல்வது ஒன்றுதான் - குரு பக்தி மூலம்தான் மோக்ஷம் அடைய முடியும். குறிப்பாக வைணவ சம்பிரதாயத்தில் ஆசார்யர் (குரு) நம்மை இராமானுஜ தாசனாக ஏறுக்கொண்டு பகவானை அடைய வழிக்கட்டுவர்.

ஆசிரியர்கள் தினத்தை முன்னிட்டு எழுதும் இந்த வலைப்பதிவில் நான் படித்தப் பள்ளிக்கூடங்களில், என் வாழ்க்கையை பிரபாவித்த சில ஆசிரியர்களை நினைத்து பார்க்க விரும்புகிறேன்...

நான் சென்னை, அடையாரில் உள்ள Hindu Senior Secondary Schoolல் LKG வகுப்பு செர்ந்தப்போது பானுமதி 'மிஸ்' இன்னும் என் நினைவில் இருக்கிறார். ஒன்றாம் வகுப்பில் சந்தான லக்ஷ்மி 'மிஸ்' எனது வகுப்பாசிரியர்.

இரண்டாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரை பெங்களூர் அலசூரில் உள்ள செயின்ட் மீராஸ் பள்ளியில் படித்தேன்.
பெங்களூர் புது இடம், புது பள்ளி, எனக்கு துணையாய் இருந்து, ஒரு ஆசிரியைக்கும் மேலாக இருந்தவர் அனசுயா (Anasuya ) 'மிஸ்'. இவர் எனக்கு கற்று கொடுத்தது வெறும் புத்தகப்பாடங்கள் அல்ல. இவர் என்னிடம் காட்டிய அன்பை நான் வாழும்வரை மறக்கமாட்டேன். என்னிடம் தவறு இல்லாமல் இருந்தால், அவர் சக ஆசிரியர்களுடனும் எனக்காக வாதாடுவார்..

எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பெங்களூர் இந்திராநகரில் உள்ள New Horizon High Schoolல் படித்தேன். இந்த பள்ளியில் வாழ்க்கை வழிக்காட்டியாக பல ஆசிரியர்கள் எனக்கு அமைந்தனர்.

ரமா சுரேஷ் (Rama Suresh) மேடம் - என்னைப்பொறுத்த வரை ஆசிரியர்களுக்கு எடுத்துக்காட்டு என்றல் இவருக்கு நிகராகாது. இவர் எனக்கு எட்டு மற்றும் ஒன்பதாம் வகுப்பு ஆங்கில பாடம் ஆசிரியர். ஒன்பதாம் வகுப்பில் வகுப்பாசிரியரும் ஆவர். மிகவும் மெல்லிய ஸ்வபாவம் இவரது. இவர் என்னைக்கவர்ந்த ஒரு சம்பவம். நாங்கள் 9ஆம் வகுப்பு முடிக்கும் நேரம். வகுப்பில் 'Farewell party'. இவர் பல பாடல்கள் பாடினார்.
ஒரு கன்னட திரைப்பட பாட்டு பாடினார் -
ನೀ ನಡೆವ ಹಾದಿಯಲ್ಲಿ ನಗೆ ಹೂವು ಬಾಡದಿರಲಿ ಈ ಬಾಳ ಬುತ್ತಿಯಲಿ ಸಿಹಿ ಪಾಲು ನಿನಗಿರಲಿ ಕಹಿ ಎಲ್ಲ ನನಗಿರಲಿ
இதன் அர்த்தம் - நீ நடக்கும் பாதையில் மலர்ந்த பூக்கள் வாடாமல் இருக்கட்டும், இந்த வாழ்கையின் எல்லா இனிமைகளும் உனதாகட்டும், க்சப்பெல்லாம் எனதாகட்டும்.
ஒரு ஹிந்தி திரைப்பட பாடலும் பாடினார்

चलते चलते, मेरे ये गीत याद रखना कभी अलविदा ना कहना कभी अलविदा ना कहना रोते हँसते, बस यूँही तुम गुनगुनाते रहना
இதன் அர்த்தம் - முன்னே செல்ல செல்ல எனது இந்த பாடலை நினைவில் வைத்துக்கொள். இந்த பந்தத்தில் இருந்து விடை பெறாதே.. எப்பொழுதும் புன்சிரிப்போடு வாழு..

இவை வெறும் திரைப்பட பாடல்கள்த்தான், ஆனால் இவைகளை பாடும் பொழுது மேடம் கண்ணில் கண்ணீர். அவர் நிஜமாகவே எல்லா நன்மைகளையும் எங்களுக்கு கொடுத்து, கஷ்டங்களை வாங்கிக்கொள்ள தயாராக இருந்தது போல் என் மனதில் தோன்றியது. இதுவரை இப்படி ஒரு குரு-சிஷ்ய பந்தத்தை உருவாக்கும் ஆசிரியரை கண்டதில்லை. இவரை எந்த மாணவனாலும் மறக்க முடியும் என்று எனக்கு தோன்றவில்லை.

கமலா கிருஷ்ணமூர்த்தி (Kamala Krishnamurthy) மேடம் - இவர் எங்கள் ஹிந்தி ஆசிரியை. ரமா மேடம் போலவே இவரும் அன்பானவர். பள்ளி மாணவர்களை தன் சொந்த குழந்தைகள் போலவே பார்ப்பவர். இவர் என் மனதில் எவ்வளவு நிலைத்திருக்கிறார் என்றல், நான் கல்லுரி படிப்பு முடித்து வேலைக்கு சென்ற பிறகுக்கூட இவர் பல முறை என் கனவில் வந்த்சு ஆலோசனை சொல்லி இருக்கிறார். இவரை சந்திக்க வேண்டும் போல இருந்தது, நான் படித்த பள்ளிக்கு சென்றேன், ஆனால் அவர் வேலையை விட்டு விட்டதை கேள்வி பட்டு திரும்பினேன்.

பொறியியல் கல்லூரி சேர்ந்தேன். அங்கு பாஸ்கர் நாய்டு (Bhaskar Naidu) என்னும் ஒரு ஆசிரியர் செயற்கைக்கோள் தொலைத்தொடர்பு (Satellite Communication) பாடங்கள் நடத்தி வந்தார். இவர் எனக்கு கற்றுக்கொடுத்த முக்கிய பாடங்களில் ஒன்று - பொறியியலின் வெற்றி அது சாதாரண மனிதனை போய் அடைவதில்தான் என்றார். இன்றும் அதுதான் 'Innovation' என்று போற்றப்படுகிறது.

இன்னும் பல ஆசரியர்கள் எனது இந்த வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

நன்றி....

அடுத்த வலைப்பதிவு விரைவில்....